100% Genuine Books

100% Secure

Billing & Ordering

9176024012

10.00 am to 9.00 pm

Shopping Cart

0 Products
Categories

Customerís Testimonials  view all »

premkumar - Professional Services

Tamil Bookman Cost is low,when Compare to other online shopping, Excellent Services. speed delivery Read More»

Your Product Details

sharukhan man of positive energy ( tamil book)

  • sharukhan man of positive energy ( tamil book)

sharukhan man of positive energy ( tamil book)

Author : Seyviar

MRP

Rs 130.00

Price

Rs 127.00

You Save

2%

Quantity :

Product Information

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் வாழ்க்கையை சுவாரஸ்யமாய் விளக்குகிறது ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி எனும் இந்த நூல்.சினிமா பின்னணி இல்லாத ஷாரூக்கானின் இளமைக் காலம் சுவாரஸ்யமானது. அவருடைய திரைத் தாகம் எப்போது துவங்கியது, எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்தது, அவருடைய திரை வாழ்க்கையின் முக்கியமான மைல் கற்கள் என்னென்ன என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக விளக்குகிறது.ஷாரூக்கானின் வாழ்க்கையிலும் ஒரு காதல் குறுக்கிட்டது. ஆத்மார்த்தமான காதல். சினிமாவில் ஷாரூக்கான் உருகி உருகிக் காதலிப்பதன் உண்மையான இன்ஸ்பரேஷன் அவருடைய நிஜக் காதல் தான். அந்தக் காதலியின் கரம் பிடிக்கும் கடைசி நிமிடம் வரை நடந்த நிகழ்வுகள் படபடக்கும் பாலிவுட் திரைப்படம் போன்றது.காதலும், தனது திரை வாழ்க்கையும் கைகூடிய கனவில் இருந்த ஷாரூக்கானின் வாழ்க்கையில் அரசியல் குறுக்கிட்டது. அந்த அரசியல் கூர்வாளை மிகக் கவனமாய் கையாண்டு புதிர்ப் புதைகுழியிலிருந்து லாவகமாய் வெளியேறிய நுட்பம் ஷாரூக்கானின் சிறப்பம்சம்.ஷாரூக்கானின் திரை வாழ்க்கையில் வெற்றிகளும் தோல்விகளும் கலந்தே இருந்தன. எப்போதுமே வெற்றி பெறும் சூப்பர் ஸ்டாராக அவர் இருக்கவில்லை. ஆனாலும் அவருடைய ரசிகர்கள் அவரை விட்டு விலகவில்லை. அதன் காரணம் அவர் ரசிகர்களை நேசிக்கும் பாங்கு தான். வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்களின் பிரியமான பார்வையும் ஷாரூக்கானின் மீதே இருந்தது. அதற்கும் பல காரணங்கள் உண்டு. அத்தகைய நிகழ்வுகளையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல்.பாலிவுட் தாதாக்களின் மிரட்டல்களை  வெகு லாவகமாகக் கையாண்டு கொல்ல வந்தவனையே நண்பனாக்கிய மனசு!கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து  ஒரு ஐ.பி.எல் அணியை வாங்கி  இரண்டறக் கலந்த ரசனை!-என ஷாரூக்கின் சினிமா தாண்டிய  பரிமாணங்களையும் நேர்மையுடன் அலசுகிறது இந்த நூல்!ஷாரூக்கான் எனும் தனி மனிதனின் ஆளுமையை மொத்தமாகச் சித்தரிக்கிறது ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி  நூல்.  தமிழில் ஷாரூக்கானைக் குறித்து வெளியாகும் முதல் நூல் எனும் சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு. 

You may also like

User Reviews

Post your Comments

The rules: Keep it clean, and stay on the subject ó or we may delete your comment.
  •